
தனுஷ் பிறந்தநாளில் ரீ ரிலீஸாகும் படங்கள்
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். நாளை ஜூலை 28ல் தனுஷ் தனது 40வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதேபோல், தனுஷ் ரசிகர்களும் தனுஷின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். இவரின் பிறந்தநாளையொட்டி சென்னை ரோஹிணி தியேட்டர், கமலா தியேட்டர், ஜி.கே சினிமாஸ் , நெல்லை ராம் சினிமாஸ், கோவை முருகன் தியேட்டர், திருப்பூர் சக்தி சினிமாஸ், வேலூர் விஷ்ணு சினிமாஸ் போன்ற திரையரங்குகளில் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'வட சென்னை' ஆகிய படங்களை இன்று இரவுக் காட்சியாக ரீ ரிலீஸ் செய்கின்றனர். இதை தொடர்ந்து நள்ளிரவில் வெளியாகும் கேப்டன் மில்லர் டீசரை தியேட்டர்களில் திரையிட்டு ரசிகர்கள் கொண்டாட உள்ளனர்.