திருவனந்தபுரம் சீரியல் நடிகை உள்ளிட்ட இருவர் ஒரு முதியவரை நிர்வாணமாகப் படம் எடுத்து 11 லட்சம் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் திருவனந்தபுரம் பட்டா பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் கேரள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வில் உள்ளார். வாடகைக்கு வீடு தேடிக்கொண்டு இருந்தபோது பத்தனம் திட்டா மலையாளப்புழா பகுதியைச் சேர்ந்த தொடர் நடிகை நித்யா சசி,உடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. வாடகை வீடு தொடர்பாக முதியவர் நித்யாவை சந்தித்தார். […]
