பாமக வன்முறை: சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடக்கம்!

என்எல்சி நிறுவனத்திற்காக கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. விளை பயிர்களை அழித்து நிலம் கையகப்படுத்தப்பட்டதறகு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்எல்சி நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர்

தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இன்று பகல் என்எல்சியை முற்றுகையிட்ட அன்புமணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் காவல்துறையினர் மீது கற்களை வீசியும் காவல் துறை வாகனங்களை தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனை தடுக்கும் வகையில் போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். ஆனாலும் கலவரம் கட்டுக்கடாங்காமல் சென்றது.

திண்டிவனத்தில் பாமகவினர் சாலை மறியல்

இதனால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த வன்முறையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 15க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர்.

இந்த கலவரம் காரணமாக சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்தக் கலவரத்தால் என்எல்சி அமைந்துள்ள நெய்வேலி நெடுஞ்சாலை பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.

கலவரம் நடந்த பகுதியில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கலவரத்தை தொடர்ந்து என்எல்சியின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.