‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய ‘ஜெயிலர்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், “உண்மைய சொல்லனும்னா நான் இன்னும் ஜெயிலர் பார்க்கல. ஆனா, படம் பார்த்த அத்தனபேரும் படம் சூப்பர்னு சொல்லிட்டாங்க. இந்த படத்தோட கதைய முதல்ல கேட்டது ரஜினி சார் தான். கதை எப்படி சார் இருக்குனு அவர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர், ‘கதை அருமையா இருக்கு… நெல்சன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று சொன்னார். இதே மாறி தான் எந்திரனுக்கும் சொன்னார்.

எனக்கு முன்னாடியே என் தாத்தா கலைஞர் ரஜினி சார ரசிச்சார். இப்போ நான் ரசிக்கிறேன். எனக்கு அப்றோம் அடுத்த தலைமுறையான என் மகள் அவரை ரசிப்பார். பாடலாசிரியர் சூப்பர் சுப்பு சொன்ன மாதிரி அப்பன்லாம் இல்ல 5 தலைமுறையினர் அவருக்கு ரசிகராக இருக்கங்க. ‘ரஜினி சார் is a record maker Not a breaker’. ரஜினி சாருக்குப் போட்டி ரஜினி சாரேதான் போட்டி. வேற யாரும் இல்ல. ரஜினி சாருக்கு இப்போ 72 வையசாகுது. இன்னும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிக்குறாங்க. அதே மாதிரி உங்களுக்கும் நின்னா நீங்களும் சொல்லுங்க நான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று. அது வரைக்கும் இந்திய திரையுலகிலே ரஜினி சார் மட்டும் தான் சூப்பர் ஸ்டார். இது தான் உண்மை” என்றார்.