நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன்,சுனில் ஆகியோரின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.’ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்தின் சகோதரர் பங்கேற்றுள்ளனர்.மேலும், ஜாக்கி ஷெராப், சிவராஜ் குமார், ரெடின் கிங்ஸ்லி, அனிருத், விக்னேஷ் சிவன், அருண் ராஜா காமராஜ், சூப்பர் சுப்பு ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வின் பங்கேற்ற ரெடின் கிங்ஸ்லி,”மத்தவங்க எப்படி வேணாலும் கூப்பிடட்டும்.நான் தலைவர்னுதான் கூப்பிடுவேன் .வணக்கம் தலைவா !,” என விசில் பறக்க பேசினார். இதனையடுத்து மேடைக்கு வந்த நடிகர் வி.டி.வி கணேஷ்,” இந்தப் படத்துல நான் சின்ன கேரக்டர்தான். ஆனால்,தலைவர செட்-ல பார்க்குறது ஒரு கெத்து !. முதல்ல ரெண்டு நாள் தலைவர் வர மாட்டார்னு நெல்சன் சொல்லிட்டாரு.அதுக்கு அப்புறம் தலைவர செட்ல பார்த்தேன்.

கேரவன் பக்கம் போகவேயில்ல.வெயில் அடிச்சாலும் இயற்கை இதுதான்னு சிம்பிளா இருப்பாரு. தலைவர்க்கு நெல்சன ரொம்ப பிடிக்கும்.கடைசி நாள் படபிடிப்புல ‘I miss you nelson’னு சொன்னாரு. தளபதி விஜய்-க்கு அப்புறம் தலைவர் கிட்ட தான் அந்த ஒழுக்கத்த பார்த்தேன். படம் பெரியளவுல ஹிட் ஆகும்.” என எதிர்ப்பார்ப்பை அதிகரித்துவிட்டு மேடையிலிருந்து விடைபெற்றார்.