ரேவா:மத்தியப் பிரதேசத்தில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இங்குள்ள, ரேவா நகர் சிவில் லைன்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் சப் – இன்ஸ்பெக்டராக இருந்தவர் பி.ஆர். சிங், 52.
இடமாற்றம் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் ஹிதேந்திர நாத் சர்மா,40. மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிங் ஆகியோரிடையே நேற்று முன் தினம் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சிங், துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் சர்மா மீது மூன்று ரவுண்டுகள் சுட்டார். காயம் அடைந்த சர்மா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இடது நுரையீரலில் துளைத்திருந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது சர்மா உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்ப முயன்ற எஸ்.ஐ., சிங் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்.பி., விவேக் சிங், சப்-இன்ஸ்பெக்டர் சிங்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் நடந்த போது, சிங் மது போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து போலீஸ் துப்பாக்கி ஒன்றும் தனிப்பட்ட லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement