முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடகாவில் 5 மாவட்டங்கள் முடங்கின‌ – தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு

புதுடெல்லி / பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், கோலார் ஆகிய … Read more

பிரேமலதா விஜயகாந்த் – தமிழக ஆளுநர் சந்திப்பு

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.  இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது.  கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் இதுவரை தங்கள் நிலை குறித்து ஏதும் கருத்து கூறாமல் உள்ளன. இந்நிலையில் இன்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆளுநர் … Read more

வாடகைக்கு டிரிங் டிரிங் சைக்கிள் மைசூரில் பயனளிக்கும் திட்டம்| Dring Dring bicycle for rent project to benefit Mysore

மைசூரு, நாட்டிலேயே முதன் முறையாக, மைசூரில் செயல்படுத்தப்பட்ட வாடகைக்கு, ‘டிரிங் டிரிங்’ மின் சைக்கிள் திட்டம், பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. கர்நாடகா மாநிலம் மைசூரில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சில ஆண்டுகளுக்கு முன், ‘டிரிங் டிரிங்’ வாடகை சைக்கிள் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்திய, நாட்டின் முதல் நகர் என்ற பெருமை மைசூருக்கு கிடைத்தது. மைசூரு மாநக ராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டம், பொதுமக்கள், சுற்றுலா பயணியருக்கு உதவியாக உள்ளது. வெளி … Read more

விடாமுயற்சி – அஜர்பைஜான் புறப்படும் அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க உள்ள 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ளது. துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். முதல் கட்டப் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற உள்ளதாம். இதற்காக அஜித் அஜர்பைஜான் நாட்டிற்குக் கிளம்ப உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடித்த த்ரிஷா, … Read more

மசோதா நிறைவேறுவதில் இழுபறி: அமெரிக்கா முடங்கும்?| Bills drag on passage: Will America paralyze?

வாஷிங்டன்,-அரசு பணிகளுக்கான செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டுஉள்ளதால், 2019ல் ஏற்பட்டதுபோல், அமெரிக்கா மீண்டும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அரசு பணிகளுக்கான செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு நிதி ஒதுக்கும் வகையில் அவ்வப்போது, அந்த நாட்டின் பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும். இவ்வாறு தற்போதைய நிலையில், நேற்றைய தினம் வரைக்கான நிதிக்கு மட்டும் ஒப்புதல் உள்ளது. வரும், நவ., மாதம் வரைக்கான செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. … Read more

Anirudh On Vijay: விஜய் கொடுத்த சூப்பர் கிஃப்ட்… அனிருத்தின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா..?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் மாஸ் காட்டி வருகிறார். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதற்கு அனிருத்தும் காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அனிருத்தின் சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி நெகிழ்ச்சியாக பேசியது, அனைத்து

நீலகிரியில் சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு; 30+ காயம்

உதகை / கோவை: நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழித்தடத்தில் உள்ள பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து 54 சுற்றுலா பயணிகள் பேருந்து மூலம் வியாழக்கிழமை உதகைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்த பின்னர், சனிக்கிழமை (செப்.30) மாலை உதகையில் இருந்து அவர்கள் பேருந்து மூலம் கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்து குன்னூர் … Read more

போக்சோ சட்டத்தில் வயதை குறைக்க கூடாது: மத்திய அரசுக்கு சட்ட குழு பரிந்துரை

புதுடெல்லி: 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 2012-ம் ஆண்டு போக்சோ சட்டத்தைக் கொண்டுவந்தது. அதேசமயம், 18 வயதுக்குட்பட்டவர்கள் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவு கொண்டாலும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் உறவுகொள்வதற்கான வயது வரம்பை 18-லிருந்து 16 -ஆக குறைக்க கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து போக்சோ … Read more

1975 மற்றும் 1979 நினைவுகள்: விடியல் கண்ட உலகக் கோப்பை… வேர்களை பரப்பிய கிரிக்கெட்டின் கதை!

World Cup Memories: ஒருநாள் வடிவத்திற்கான உலகக் கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதுவரை 12 ஐசிசி தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அதிகமாக 5 முறை கோப்பையை கைப்பற்றியிருக்கிரது. அதேபோல், இந்தியா 2 முறையும், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தலா 1 முறையும் சாம்பியனாகி உள்ளன. வெறியில் 10 அணிகள் இந்த அணிகள் தற்போதைய உலகக் கோப்பை தொடரை வென்று தங்களின் கோப்பை கணக்கை அதிகப்படுத்திக்கொள்ள துடித்துக்கொண்டிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, … Read more

இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நீதிமன்றம் அமைச்சரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி  செய்ததால் அவர இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி … Read more