சேலம் அரசு தலைமை மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து!
சேலம் அரசு தலைமை மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்துக்கு மின் கசிவு காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் மழை தொடரும்..!
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் குறிப்பாக இரவு தொடங்கி மிதமான மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் நிலவும் மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதை பள்ளியின் தலைமை ஆசிரியரே முடிவெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்கள்.