பெங்களூரு : கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோக், வறட்சி மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்கிறார்.
கர்நாடகாவில் நடப்பாண்டு மழைப் பற்றாக்குறையால், அணைகள் நிரம்பவில்லை. 200க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ஏக்கர் விளைச்சல் பாழானது.
வறட்சி பாதித்த பகுதிகளை, அமைச்சர்கள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற அசோக், பல்லாரி, துமகூரு, பல்லாரி மாவட்டங்களில், இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வறட்சியை ஆய்வு செய்கிறார்.
விவசாயிகளை சந்தித்து விளைச்சல் சேதம், பொருட் சேதம் உட்பட வறட்சி பாதிப்பு குறித்த தகவல்களை சேகரிக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement