பங்கார்பேட்டை : பங்கார்பேட்டையில் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், சிறு பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியே அனுப்ப பெற்றோர் பயப்படுகின்றனர்.
பங்கார்பேட்டையில் எல்லா சாலைகளிலும், தெருக்களிலும், கும்பல் கும்பலாக தெருநாய்கள் நடமாடுகின்றன. மீன்கள், சிக்கன் கடைகள் உட்பட இறைச்சிக் கடைகளின் கழிவுகள், ஹோட்டல்களில் மிச்சமாகிற கழிவுகள் குப்பையிலும், ஆங்காங்கேயும் கொட்டுவதால் தீவனங்களுக்காக ஆங்காங்கே தெரு நாய்கள் கூடுகின்றன.
இதனால், பலரும் ரோடுகளில் செல்ல பயப்படுகின்றனர். பங்கார்பேட்டை டவுன் சபை பகுதியில் 1,622 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தெருநாய்கள் கடித்து பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய்கள் இனப்பெருக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாலுகா சுகாதாரத்துறைக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும் பலர் புகார் செய்துள்ளனர்.
இதுமட்டுமல்ல தெருக்களில் பன்றிகள், பசுக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது. இதன் மீது டவுன் சபை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement