வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது மிகவும் துணிச்சலான நடவடிக்கை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
‘மேக் இன் இந்தியா’ திட்டம்
‘மேக் இன் இந்தியா’ திட்டம் இந்திய தொழிலதிபர்கள் பலரது வெற்றி வாய்ப்புக்கு வழி வகுத்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற போது மேக் இன் இந்தியா தொடர்பான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதிய முதலீட்டாளர்கள் எளிதில் தொழில் முதலீடு செய்ய ஏதுவாக அரசு கட்டுப்பாடுகள் இத்திட்டத்தின் மூலம் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வங்கிக் கடன்கள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டன. நாட்டின் மொத்த கொள்முதல் உற்பத்தியை அதிகரிக்க மேக் இன் இந்தியா திட்டம் உதவியாக உள்ளது.
‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது மிகவும் துணிச்சலான நடவடிக்கை. காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை தொடர்ந்து விமர்சித்தன. ஆனால், விரைவில் நாம் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு தயாராகிவிடுவோம்.
இதற்கு அடித்தளம் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தான். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வெற்றியின் காரணமாக, நமது ஏற்றுமதியில் பொருட்களின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement