Darshan with actor Shahrukhs daughter at Shirdi Saibaba Temple | ஷீரடி சாய்பாபா கோயிலில் நடிகர் ஷாரூக் மகளுடன் தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஷீரடி: பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மற்றும் அவரது மகள் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். அதுபோல் அரசியில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் வருவது வழக்கம்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் சாய்பாபா கோயிலுக்கு வருகை தந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுடன் நடிகரின் மேனேஜர் பூஜாத்தலானியும் உடனிருந்தார்.

கோயிலுக்கு நுழையும் போது அவரது ரசிகர்கள் நடிகரை பார்த்ததும் அவரை பார்த்து கையசைத்தனர். ஒரு சிலர் நடிகரிடம் பேசினர்.
நடிகரின் கோயில் தரிசனம் குறித்து நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

இவர் நடித்துள்ள டன்கி படம் வரும் 21-ம் தேதி வெளியாகிறது. அதற்காக அவர் கோயிலுக்கு வருகை தந்துள்ளார். இதே போன்று இந்தாண்டு வெளியான பதான் மற்றும் ஜவான் படங்கள் வெளியான போதும் அவர் கோயில்களுக்கு சென்று வந்துள்ளார் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.