IPL Auction: யார் இந்த மல்லிகா சாகர்? ஐபிஎல் வீரர்களை ஏலம் விடும் இவரின் சம்பளம் இவ்வளவா!

IPL 2024 Auction: ஐபிஎல் ஏலம் என்றாலே எந்த வீரர் எத்தனை கோடிக்கும் ஏலம் போகப்போகிறார்கள் என்ற நினைப்புதான் அதிகம் இருக்கும். ஆனால், பலரும் அந்த ஏலம் விடும் நபரை அதாவது அந்த ஏலதாரரையும் மிகவும் கவனிப்பார்கள். ஒவ்வொரு செட்டாக ஒவ்வொரு வீரரின் பெயரையும் அறிவித்துவிட்டு, ஏலம் கேட்கும் அணிகளை சரியாக பார்த்து அதை அறிவிக்கும் பொறுப்பு அந்த ஏலம் விடும் நபருக்கு உள்ளது. 

யார் இந்த மல்லிகா சாகர்?

அந்த வகையில், இந்த ஐபிஎல் மினி ஏலம் நிகழ்வில் பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் (Mallika Sagar) ஏலத்தின் பொறுப்பாளராக (IPL Auctioneer) செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ஏலத்தின் பொறுப்பாளராக இருந்த ஹக் எட்மீட்ஸிற்கு மாற்றாக மல்லிகா சாகர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஹக் எட்மீட்ஸ் கடந்த 2022 மெகா ஏலத்தின் போது மேடையிலேயே சரிந்து விழுந்தார். 

அப்போது பிரபல வர்ணனையாளரான சாரு ஷர்மா வீரர்களை ஏலம்விடும் பொறுப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஐபிஎல் தொடரில் முதல் ஏலதாரராக ரிச்சர்ட் மேட்லி செயல்பட்டு வந்த நிலையில், அடுத்த ஹக் எட்மீட்ஸ் செயல்பட்டார். தற்போது ஹக் எட்மீட்ஸிற்கு மாற்றாக மல்லிகா சாகர் முதல் பெண் ஏலத்தாரராக நியமிக்கப்பட்டார்.

முதல்முறை அல்ல

ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலம் அந்த வகையில் ஒரு வரலாற்று தருணமாக இருக்கும். மல்லிகா சாகர் இதற்கு முன்பு பெண்கள் பிரீமியர் லீக்கின் (WPL) முதல் இரண்டு ஏலங்களில் ஏலம் எடுப்பவராக இருந்தார். ப்ரோ கபடி லீக்கில் (PKL) ஏலத்தாரராகவும் இருந்துள்ளார். 

மல்லிகாவின் இந்தியாவில் பிறந்தநாளில், வெளிநாட்டில் படித்தவர். அவர் பிலடெல்பியாவில் உள்ள பிரைன் மாவ்ர் கல்லூரியில் கலை வரலாற்றில் தனது மேஜர்களைப் பெற்றார் மற்றும் நியூயார்க்கில் உள்ள சர்வதேச மற்றும் புகழ்பெற்ற ஏல நிறுவனமான கிறிஸ்டியில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் கிறிஸ்டியில் சேர்ந்தபோது, அவர்களுக்காக இந்தியாவில் இருந்து ஏலம் எடுத்த முதல் பெண்மணி ஆனார்.

India’s new favourite auctioneer!

Mallika Sagar continues to blaze the way, and will be the auctioneer at the #IPL2024Auction.#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi pic.twitter.com/tlHLo0EtED

— Punjab Kings (@PunjabKingsIPL) December 18, 2023

மல்லிகா சாகர் சம்பளம் எவ்வளவு?

48 வயதான மல்லிகா ஏலதாரராக அனுபவம் வாய்ந்தவர் ஆவார். இத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள மல்லிகா சாகருக்கு இன்று முக்கிய நாளாகும். இவர் இந்த ஏலத்திற்காக 2 கோடியே 25 லட்ச ரூபாயை சம்பளமாக பெறுகிறார் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன.

முந்தைய ஏலதாரர் எட்மீட்ஸின் உடல்நிலை காரணமாக பிசிசிஐ அவரை புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், எட்மீட்ஸ் இந்த ஐபிஎல் ஏலத்தில் ஈடுபடவில்லை என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ‘Postural Hypertension’ காரணமாக எட்மீட்ஸ் மேடையில் சரிந்தார்.

எப்போது ஐபிஎல் மினி ஏலம்

இந்த ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது. மேலும், ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொலைக்காட்சியில் பார்க்கலாம் மற்றும் ஜியோ சினிமா செயலி மற்றும் அதன் இணையதளத்தில் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.