EV Car and SUV launches – இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு வெளியான எலக்ட்ரிக் கார்கள்

2023 ஆம் ஆண்டு நிறைவடைவதனை ஒட்டி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி மாடல்கள் பற்றி ஒரு தொகுப்பினை அறிந்து கொள்ளலாம்.

டாடா மோட்டார்ஸ் நாட்டின் முதன்மையான எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. 2023ல் பிரிமீயம் சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5, வால்வோ C40 கூபே ரீசார்ஜ், மெர்சிடிஸ்-பென்ஸ் EQE, பிஎம்டபிள்யூ iX1, ஆடி Q8 e-tron, e-tron ஸ்போர்ட்பேக் மற்றும் லோட்டஸ் எல்ட்ரா ஆகியவற்றுடன் மஹிந்திரா XUV400, சிட்ரோன் eC3, எம்ஜி காமெட், மேம்படுத்தப்பட்ட நெக்ஸான்.இவி ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளது.

Hyundai Ioniq 5

2023 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் விலை ரூ.44.95 லட்சம் ஆக உள்ளது. இந்த மாடலில் 72.6Kwh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 631 கிமீ ரேஞ்ச் வழங்குகின்றது. இதன் பவர் 214 bhp மற்றும் 350 Nm டார்க் ஆகும்.

இந்திய சந்தையில் CKD முறையில் பாகங்கள் தருவித்து ஒருங்கிணைக்கப்படுகின்ற ஐயோனிக் 5 காரின் விற்பனை எண்ணிக்கை சமீபத்தில் 1100க்கு கூடுதலாக பதிவாகியுள்ளது.

hyundai ioniq5

Mahindra XUV400

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி400 விற்பனைக்கு வெளியான நிலையில் ஆரம்ப கட்டத்தில் அமோக முன்பதிவினை பெற்றது. ரூ.15.99 லட்சம் விலையில் துவங்கின்ற XUV400 எலக்ட்ரிக் காரில்  34.5kWh மற்றும் 39.4kWh என இரண்டும் 150hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது.

34.5kWh பேட்டரி பெற்ற XUV400 கார் 375 கிமீ ரேஞ்ச் அடுத்தப்படியாக, 39.4kWh பேட்டரியுடன் இந்திய ஓட்டுநர் சான்றிதழ்படி (MIDC- Indian driving cycle) ஒருமுறை சார்ஜ் செய்தால் 456கிமீ ரேஞ்ச் ஆகும்.

xuv400

Citroen eC3

சிட்ரோன் நிறுவனம் சி3 அடிப்படையில் வெளியிட்ட eC3 எலக்ட்ரிக் மாடல் ரூ.11.61 லட்சம் முதல் ரூ.12.79 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த மாடலில் உள்ள 29.2 kWh பேட்டரி பேக்குடன் ஃபிரண்ட் வீல் டிரைவ் பெற்று இந்த காரில் உள்ள மின்சார மோட்டார் அதிகபட்சம் 57 hp பவர் மற்றும் 143Nm டார்க் வழங்குகிறது.

ARAI சான்றளிக்கப்பட்ட 320 Km வரம்பை கொண்டுள்ளது.  ஈகோ மற்றும் ஸ்டாண்டர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகளை பெற்று கூடுதலாக பவரை சேமிக்க ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் பெற்றுள்ளது.

ec3 காரின் பேட்டரிக்கு அதிகபட்சமாக  7 ஆண்டு அல்லது1,40,000 கிமீ வாரண்டியையும், மின்சார மோட்டாருக்கு 5 ஆண்டு அல்லது 1,00,000 கிமீ வாரண்டியையும், இந்த காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1,25,000 கிமீ வாரண்டி கிடைக்கின்றது.

citroen ec3 suv

MG Comet

குறைந்த விலையில் வெளியான எம்ஜி காமெட் எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.7.98 லட்சம் முதல் ரூ. லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காமெட் எலக்ட்ரிக் காரின் பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3.3 kW சார்ஜர் வாயிலாக 10-80% சார்ஜ் பெற 5 மணி நேரம், 0-100% சார்ஜ் பெற 7 மணி நேரம்  தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. மூன்று விதமாக கிடைக்கின்ற காமெட் காரில் பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகள் வழங்கப்படுகின்றது.

mg-comet-ev-rear

BMW iX1

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் விலை ரூ.69.90 லட்சம் ஆகும். iX1 xDrive30 வேரியண்டில் 64.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இரட்டை மோட்டார் அமைப்பின் மூலம் அதிகபட்சமாக 313bhp பவர் மற்றும் 494Nm டார்க் வரை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி வெறும் 5.3 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும் . AWD கொண்டதாக வரவுள்ளது.

iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை சிங்கிள் சார்ஜிங் மூலம் அதிகபட்சமாக 440KM வரை வெளிப்படுத்தும்.

BMW iX1 Electric SUV

Volvo C40 Recharge

இந்தியாவில் வால்வோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள புதிய சி40 கூபே ரீசார்ஜ் எலக்ட்ரிக் கார் விலை ரூ. 61.25 லட்சத்தில் கிடைக்கின்றது.

அதிகபட்சமாக 408hp பவர் மற்றும் 660 Nm டார்க்கை வழங்குகின்றன. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை அடைய 4.9 விநாடிகள் தேவைப்படுகின்றது. அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

78kwh  பேட்டரியிலிருந்து சக்தியை பெறும் சி40 காரின் ரேஞ்சு 534 கிமீ கிடைக்கும் என WLTP மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ICAT முறையில் 638km வரை ரேஞ்சு கிடைக்கும்.

volvo c40 recharge suv

Mercedes-Benz EQE

ஆடம்பர கார்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் வெளியிட்டுள்ள EQE எலக்ட்ரிக் விலை ரூ.1.39 கோடி ஆகும். 300 kW அல்லது 402 HP பவர் மற்றும் 858 Nm டார்க் வழங்குகின்ற 90.56 kWh பேட்டரி கொண்டதாக அமைந்துள்ளது. WLTP ரேஞ்சு ஆனது 550 கிமீ ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 210 Kmph ஆகவும்,  0-100kmph வேகத்தை எட்ட முதல் 4.9 வினாடி ஆகும்.

பல்வேறு ஆடம்பர சொகுசு வசதிகளை பெற்றுள்ள பென்ஸ் இக்யூஇ காரில்  56 அங்குல ஹைப்பர்ஸ்கிரீன் கொண்ட MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

Mercedes EQE 500
AMG Line Exterior, Night Package, Velvet brown metallic, 22″ AMG multi-spoke light-alloy wheels, Electric Art Line Interior, Leather Nappa balao brown/neva grey

Audi Q8 e-tron, e-tron Sportback

ஆடி இந்தியா வெளியிட்டுள்ள புதிய க்யூ8 இ-ட்ரான் மற்றும் க்யூ8 இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் விலை ரூ.1.14 கோடி முதல் ரூ.1.30 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது.

க்யூ8 இ-ட்ரான் எஸ்யூவி காரில் 55 வேரியண்ட் மிகப்பெரிய 114kW பேட்டரி ஆகவும், குறைந்த-ஸ்பெக் 50 வேரியண்ட் 95kW பேட்டரி பேக் கொண்டதாக வந்துள்ளது. இரண்டு மின் மோட்டார்கள் ஒவ்வொரு அச்சிலும் இவை முறையே 50 மற்றும் 55 வகைகளில் 340hp மற்றும் 408hp ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பவர் கொண்டுள்ளன, அதே நேரத்தில் இரு மாடல்கள் 664Nm டார்க் வெளிப்படுத்தும்.

இ-ட்ரான் 50 ஆனது 491km மற்றும் இ-ட்ரான் 55 மாடல் 582km வரை உரிமை கோரப்பட்ட ரேஞ்ச் கொண்டுள்ளது, அதே நேரத்தில் Sportback 50 மற்றும் 55 வகைகளுடன் முறையே 505km மற்றும் 600km அதிகபட்சமாக ரேஞ்ச் கொண்டுள்ளது.

q8 etron

Lotus Eletra

சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான லோட்டஸ் இந்தியாவில் நுழைந்த உடனே முதல் மாடலாக எலட்ரா எலக்ட்ரிக் காரை ரூ.2.55 கோடி முதல் ரூ.2.99 கோடி வரை வெளியிட்டுள்ளது.

Eletre (611 hp & 710Nm ), Eletre S (611 hp 710Nm ), மற்றும் Eletre R (918 hp 985Nm) என மூன்று விதமாக கிடைக்கின்ற இந்த மாடலில் 112kWh kWh பேட்டரி பொருத்தப்பட்டு பவரை வழங்க 800 வோல்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. குறைந்த பவரை வெளிப்படுத்தும் இரண்டு வேரியண்டுகளும் 600 கிமீ ரேஞ்சு, அதிகபட்ச பெர்ஃபாமென்ஸ் வழங்குகின்ற டாப் எலட்ரா ஆர் வேரியண்ட் 490 கிமீ ரேஞ்சு வழங்குகின்றது.

lotus eletre suv

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.