விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிறைவடைய இன்னும் இரு வாரங்களே இருக்கின்றன.
நிகழ்ச்சி க்ளைமாக்ஸை நெருங்கிவிட்ட நிலையில், யார் இறுதிச் சுற்றுக்கு வரப் போகிறார்கள், யார் டைட்டில் வெல்லப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. அர்ச்சனா, விசித்ரா, மாயா, விஷ்ணு, தினேஷ் எனப் பலரும் தங்கள் திறமைகளைக் கூடுமானவரை காட்டி, நிகழ்ச்சியைத் தங்கள் பக்கம் திருப்ப முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக் பாஸ் செட்டில் தொடங்கியது. போட்டியாளர்களிடம் வழக்கமான நல விசாரிப்புகளைச் செய்த கமல் பிற்பகலில் எவிக்ஷன் நடைமுறைக்கு வந்தார்.
வெளியேற்றத்துக்கான நாமினேஷன் பட்டியலில் தினேஷ், மாயா, நிக்சன், ரவீனா, மணி, விஜய் வர்மா ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்படி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்திருக்கிறது. அதாவது இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து இருவர் வெளியேறியிருக்கிறார்கள். நிக்சன் மற்றும் ரவீனாதான் அந்த இருவர். மாயா நூலிழையில் தப்பித்தார் எனச் சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 7ஐப் பொறுத்தவரை டபுள் எவிக்ஷன் நிகழ்வது இது முதல் தடவையல்ல. ஏற்கெனவே அக்ஷயா மற்றும் பிராவோ ஒரே வாரத்தில் வெளியேறியது நினைவிருக்கலாம். நிக்சன் மற்றும் ரவீனா இருவருமே முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் பங்கெடுத்து வரும் போட்டியாளர்கள். நேற்று வரை இருவருமே வலுவான போட்டியாளர்களாகவே பார்க்கப்பட்டு வந்தனர். அதேபோல் நிகழ்ச்சிக்கு இருவருமே கன்டென்ட் தந்து வந்தார்கள் என்றும் சொல்லலாம்.
நிக்சன் ஐஷு இருவரும் பழகிய விதம் சர்ச்சைக்குள்ளானதும், ஐஷுவின் குடும்பத்தினர் இது தொடர்பாக பிக் பாஸ் வீட்டுக்கே சென்று புகார் தந்ததும் நடந்தது நினைவிருக்கலாம். ஐஷு வெளியில் வந்த பிறகுதான் நிக்சன் விளையாட்டின் மீது கவனம் செலுத்துவாரோ என நினைத்தார்கள் பி.பா.ரசிகர்கள்.

ஒரு வழியாக ஐஷுவும் எவிக்ட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து சில வாரங்களுக்கு முன் வெளியேறினார். இந்தப் பக்கம் ரவீனாவுமே மணியுடன் நட்பு பாராட்டினார். இருவரும் ஏற்கெனவே பரஸ்பரம் நல்ல நட்பிலிருப்பவர்கள் என்றும் சொல்லப் படுகிறது.
ரவீனா, நிக்சன் – இவர்கள் இருவருமே ஆரம்பத்திலிருந்தே மாயா கூட்டணிதான் என்கிற ஒரு பேச்சும் இருந்த நிலையில் இன்று இவர்கள் இருவரும் எவிக்ட்டாகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.