வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பார்லிமென்ட் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அவசரகால அடிப்படையில் 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகளையும், தளவாடங்களையும் இஸ்ரேலுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இஸ்ரேலின் தற்காப்புக்கான அவசிய தேவையை முன்னிட்டு, வெளியுறவு அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடி அனுமதி அளித்துள்ளார். பார்லிமென்டிற்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்களை தருகிறோம். மக்கள் பலியாகி விடக்கூடாது என அமெரிக்கா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement