
விலகுகிறேன், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன் : இலக்கியா நடிகை பதிவு
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் நாயகியாக நடித்து வரும் ஹீமா பிந்துவும் நேயர்களின் பேவரைட் ஹீரோயின் பட்டியலில் இடம்பிடித்து விட்டார். இந்த தொடருக்கு கிடைக்கும் வரவேற்பால் விரைவில் மலையாளத்திலும் ரீமேக் ஆக உள்ளது. இப்படியாக தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க இந்த தொடரின் கதாநாயகி ஹீமா பிந்து சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
ஹீமா பிந்துவுக்கு அண்மையில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் சீரியலில் கவனம் செலுத்துவது கடினமாக இருப்பதாகவும் எனவே சீரியலை விட்டு விலகுவதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இனி இலக்கியா கதாபாத்திரத்தில் கண்மணி தொடரில் நடித்த சாம்பவி குருமூர்த்தி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.