வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: தெலங்கானாவில் உணவு டெலிவரி செய்ய ஜூமாட்டோ நிறுவன ஊழியர் குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
உணவு விநியோக துறையில் முன்னணியில் இருந்து வருகிறது ஜூமாட்டோ நிறுவனம். நாடு முழுவதும் சிறிய நகரங்கள் முதல் பெரிய நகரங்கள் வரையில் ஸ்மார்ட்போன் மற்றும் டூவீலர் வைத்திருக்கும் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துவருகிறது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் முக்கிய வீதியில் ஜூமாட்டோ ஊழியர் குதிரையில் உணவு டெலிவரி செய்ய சென்ற புகைபடம் , வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
நேற்று லாரி ஓட்டுனர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால் பெட்ரோல் பங்க்குகளில் இரு சக்கரவாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடந்தனர். பெட்ரோலுக்காக தானும் இருசக்கர வாகனத்துடன் காத்திருந்தால் பணி பாதிக்கும் என்பதால் குதிரையில் சென்று உணவு டெலி வரி செய்தது தெரியவந்தது.
இதற்கு முன் கடந்தாண்டு ஜூலையில் மும்பையில் கனமழை பெய்த போது, சாலையில் தேங்கிய மழைநீரால் இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத ஸ்விக்கி ஊழியர் உணவு டெலிவரி செய்ய குதிரையில் சென்ற சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement