வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒரு நாடு, ஒரு தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என உயர்நிலை குழு இன்று தெரிவித்துள்ளது.
லோக்சபா மற்றும்மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய அரசு குழுவைநியமித்துள்ளது.
இந்தக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவின் கீழ் உயர்மட்ட குழு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு நாடு ஒரு தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. ஆலோசனைகள், கருத்துக்களை கூற விரும்பினால், http://onoe.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 15-ம் தேதிக்குள் பெறப்படும் அனைத்து கருத்துக்களும் உயர்நிலை குழுவால் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement