மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித், கோலி! கேள்விக்குறியாகும் இந்த வீரர்களின் எதிர்காலம்?

நடந்து முடிந்த ஒருநாள் போட்டி உலகக் கோப்பை பைனலில் அகமதாபாத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியிலும் ரோஹித் சர்மாவின் அணி தோல்வியை தழுவியது. கடந்த 14 மாதங்களில் இந்திய அணி சிறப்பாக செய்யல்பட்டாலும் முக்கிய போட்டிகளில் தோல்வியை தழுவியது.  கடந்த டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம் பெறாத ரோஹித் மற்றும் கோலி தற்போது மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.  கடந்த 2023 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு பிறகு பிசிசிஐ இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முகங்களை மாற்றியது. இளம் வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பெற்று இருந்தனர். மேலும், ஹர்திக் பாண்டியா இல்லாத சமயத்தில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்குப் பிறகு இந்தியா விளையாடிய 16 டி20 போட்டிகளில், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் தலைமையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் ஷர்மா ஆகிய புதிய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது.  மேலும், சர்வதேச அளவில் இந்த இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர்.  இடது கை ஆட்டக்காரர்கள் இல்லாமல் இருந்த இந்திய அணியில், அதிக இடது கை ஆட்டக்காரர்கள் இடம் பெற்றனர். இந்த இளம் இந்திய அணி நல்ல ஹிட்டர்கள், சிறந்த மிடில்-ஆர்டர் மற்றும் மிக முக்கியமாக ஃபினிஷர் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த பலம் வாய்ந்த அணியில் கோலி மற்றும் ரோஹித்தின் தேவை இல்லாத போதிலும்,  சுனில் கவாஸ்கர் மற்றும் இர்பான் பதான் போன்றவர்கள் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில்  அனுபவம் வாய்ந்த பீட்டர்கல்பதேவை என்று கூறி வந்தனர்.  

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 அணியில் கோலி மற்றும் ரோஹித் மீண்டும் இடம் பெற்றனர்.  இந்த தொடருக்கு மட்டுமில்லாமல் டி20 உலக கோப்பைக்கும் இவர்கள் அணியில் இருக்க வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். கடந்த 24 மாதங்களில் ரோஹித்துக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்து வருகிறார், ஆனால் அவர் பல நாட்கள் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டில் முதுகில் ஏற்பட்ட காயத்துடன் அவர் போராடியதால், அந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா இழந்தது. அதே போல இந்த ஆண்டு ODI உலகக் கோப்பைக்கும் அவர் போட்டியின் ஆரம்ப பகுதியில் கணுக்கால் காயத்தால் வெளியேற்றப்பட்டார், அதில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை. ஹர்திக் இல்லாத நிலையில், தென்னாப்பிரிக்கா தொடரை சூர்யகுமார் வழிநடத்தி தொடரை 1-1 என சமநிலையில் இந்தியா வென்றது.   இறுதி ஆட்டத்தின் போது சூர்யகுமாருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது, இதனால் அவரை ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறினார். 

நவம்பர் 2022 முதல் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத ரோஹித் மற்றும் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட போட்டியில் விளையாடும் லெவனில் இடம் பெற உள்ளனர்.  இது உலகக் கோப்பைக்கு முன் டி20 களில் இந்தியாவின் கடைசி தொடர் ஆகும்.  இவர்களது வருகையால் ஐபிஎல் 2023 சீசனில் அற்புதமாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மான் கில், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக கூடும்.  மேலும், டி20 உலகக் கோப்பை அணியில்  ஹர்திக் மற்றும் சூர்யகுமார் நிச்சயம் இருப்பார்கள் என்பதால் மேலும் சில இளம் வீரர்களின் வாய்ப்பு பறிபோகும்.  ரோஹித் மற்றும் கோஹ்லி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ஐபிஎல் 2024 சீசனில் அவர்களின் பார்ம் பொறுத்து பிசிசிஐ முடிவெடுக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.