சென்னை தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் புகையில்லா போகிப் பண்டிகை என்னும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளது. தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, போகியன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் […]
