தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தினரால் உருவாக்கப்பட்ட உணவு களஞ்சிய முகாமை அமைப்பு என்ற புதிய மென்பொருள் குகுலேகங்க லயா லெஷரில் சனிக்கிழமை (ஜனவரி 13) அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பாரம்பரிய களஞ்சியப் பதிவு செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு திட்டமாகும். மேலும் ஊழியர்களுக்கு ஒரு அடிப்படை பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உணவு களஞ்சிய முகாமை அமைப்பு என்பது ஒரு ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான தளமாகும், இது களஞ்சிய கட்டுப்பாட்டு செயல்முறைகளை நெறிப்படுத்தவும் நிர்வகிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. களஞ்சிய நிலைகளை மேம்படுத்துதல், பொருத்தமான மறுவரிசைப் புள்ளிகளை நிறுவுதல் மற்றும் தேவையற்ற கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்ட முகாமையாளர் மேஜர் ஜேஎச்எச் பெரேரா, மற்றும் மென்பொருள் பொறியியலாளர் லெப்டினன் எம்ஈஆர் குமாரசிங்க, ஆகியோர் இந்த தீர்வை நடைமுறைக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
கேணல் தகவல் தொழிநுட்பம் கேணல் எம்.ஆர் ஹமீம் யூஎஸ்பீ அவர்கள் குக்குலேகங்க லயா லெஷர் பொது முகாமையாளர் கேணல் ஆர்எம்எச் ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.