இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் படேல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர். 3 பவுண்டரிகள் விளாசி 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா அவுட்டானார்.
