உலகெங்குமுள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024ம் ஆண்டிற்கான 66வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அவ்வகையில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. சக்தி குழுவின் ‘திஸ் மொமென்ட்’ என்கிற அல்பத்திற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசைக்குழுவில் சங்கர் மகாதேவன், செல்வ கணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜான் மெக்லாஃப்லின், உஸ்தாத் ஜாகிர் உசேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விருதை பெற்றுக் கொண்டபின் பேசிய சங்கர் மகாதேவன், “எனது குழு, கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த விருதை நான் என் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். கிராமி விருதை வென்ற ‘திஸ் மொமென்ட்’ இசைக்குழுவிற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.