டெல் அவிவ் :செங்கடல் பகுதியில் சென்ற சரக்கு கப்பல் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக, ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில், அந்த கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், 2023 அக்., 7 முதல் மோதல் நடந்து வரும் நிலையில், செங்கடல், அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில், சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த தாக்குதலை, ஏமனில் இருந்து செயல்படும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கடல் வழியாக சென்ற, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, ட்ரோன் வாயிலாக நேற்று காலை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில், கப்பலில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதலை, ஹவுதி படையினர் நடத்தியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement