சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் மாதம் ஆண்டிறுதி பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் இன்றுமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு இன்று (பிப்ரவரி 20) பிற்பகல் ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாநில பாடத் திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு […]
