ரீசார்ஜ் பண்ண போறீங்களா? 100 ரூபாய்க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் இதுதான்

Cheapest Recharge Plan: மலிவான மற்றும் விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்கள் இரண்டும் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இதில் எந்த நிறுவனத்தின் திட்டம் மலிவாக இருக்கிறது என்பது தான் கேள்வி? அந்த வகையில் நீங்களும் 100 ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் இதற்கான பதிலை இந்த கட்டுரையில் நீங்கள் பெறலாம். உண்மையில், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களின் மலிவானத் திட்டங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். இவை அனைத்தும் ரூ 100க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும்.

ஏர்டெல் திட்டம் ரூ.100க்கு கீழே | Airtel Recharge Plan Under 100
* ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.29 ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 1 நாள் ஆகும். இதில் 2 ஜிபி டேட்டா நன்மையைப் பெறுவீர்கள். 
* ஏர்டெல்லின் ரூ.49 ரீசார்ஜ் திட்டத்திலும் நீங்கள் டேட்டா நன்மையை பெறுவீர்கள். இதன் வேலிடிட்டி காலம் 1 நாள் ஆகும்.
* இந்த டேட்டா திட்டத்துக்கும் பேஸ் பிளான் வேலிடிட்டி (Base Plan Validity) வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 4 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு 2 ஜிபிக்கான ப்ரீ டேட்டா கூப்பன் வழங்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 6 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.
* 100 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் நீங்கள் ரூ.81.75 டாக் டைம் பெறுவீர்கள்.

பிஎஸ்என்எல் திட்டம் ரூ.100க்கு கீழே | BSNL Recharge Plan Under 100
* ரூ.87 ரீசார்ஜ் திட்டம் – பிஎஸ்என்எல் இன் திட்டம்14 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வரம்பற்ற குரல், தினமும் 1ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுவீர்கள்.
* 97 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்- இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 2 ஜிபி டேட்டா பலனைப் பெறுவீர்கள். செல்லுபடி காலம் 15 நாட்கள் ஆகும்.
* 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் – பிஎஸ்என்எல் இன் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 17 நாட்கள் செல்லுபடியுடன் வரும்.

ரிலையன்ஸ் ஜியோ திட்டம் ரூ.100க்கு கீழே | Reliance Jio Recharge Plan Under 100
* ரூ26 ரீசார்ஜ் திட்டம் – 5ஜி வரம்பற்ற டேட்டா பலன் கிடைக்கும். தினமும் 2 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுவீர்கள். டேட்டா தீர்ந்துவிட்டால், 64 Kbps உடன் இணையத்தை இயக்கலாம். செல்லுபடி காலம் 28 நாட்கள் ஆகும். இந்த திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
* ரூ.91 ரீசார்ஜ் திட்டம் – 5ஜி வரம்பற்ற டேட்டா நன்மை கிடைக்கும். ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 50 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா ஆகியவற்றைப் பெறுவீர்கள். டேட்டா தீர்ந்துவிட்டால், 64 Kbps உடன் இணையத்தை இயக்கலாம். செல்லுபடி காலம் 28 நாட்கள் ஆகும். இந்த திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
* ரூ. 62க்கான ரீசார்ஜ் திட்டம்- 5ஜி வரம்பற்ற டேட்டா நன்மை கிடைக்கும். தினமும் 6ஜிபி டேட்டா கிடைக்கும். டேட்டா தீர்ந்துவிட்டால், 64 Kbps உடன் இணையத்தை இயக்கலாம். செல்லுபடி காலம் 28 நாட்கள் ஆகும். இந்த திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
* ரூ. 75 ரீசார்ஜ் திட்டம் – 5G வரம்பற்ற டேட்டா நன்மை கிடைக்கும். ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 50 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸின் இலவச சந்தாவுடன் வருகிறது. டேட்டா தீர்ந்துவிட்டால், 64 Kbps உடன் இணையத்தை இயக்கலாம். செல்லுபடி காலம் 23 நாட்கள் ஆகும். இந்த திட்டம் ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில், 14 OTT உடன் 78 ஜிபி கூடுதல் டேட்டா நன்மையும் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா திட்டம் ரூ.100க்கு கீழே | Vi Recharge Plan Under 100
* வோடபோன் ஐடியா ரூ.39 ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது, இதில் மூன்று நாட்கள் செல்லுபடியுடன் 3ஜிபி டேட்டாவின் நன்மை கிடைக்கும். 
* இது தவிர, ரூ.57 ரீசார்ஜ் திட்டத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டா சேவை கிடைக்கும். 
* 58 ரூபாய் திட்டத்தில் 3 ஜிபி டேட்டா பலன் 28 நாட்களுக்கு கிடைக்கும். 
* ரூ. 82 ரீசார்ஜ் திட்டத்தில் Disney+Hotstar மொபைல் சந்தாவைத் தவிர, 14 நாட்களுக்கு 4 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுவீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.