மும்பையில் இருந்து அடுத்த ஆண்டு வெளியேறும் 2 வீரர்கள்! மஞ்சள், ஆரஞ்சு சட்டையில் பார்க்கலாம்

கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிய பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் ஓயவில்லை. பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை திடீரென அந்த அணியுடன் டிரேட் செய்து எம்ஐ அணி அழைத்து வந்ததுடன் எந்த காரணமும் சொல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது ரோகித் சர்மாவுக்கே அதிர்ச்சியாக இருந்தது. அதனால், மும்பை அணியில் இருந்து விலகும் முடிவில் பும்ரா, சூர்யகுமார், ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர். 

இந்த ஆண்டே அந்த அணியில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால், கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்பை வீரர்களுக்கான வர்த்தக தேதி முடிந்த பிறகே மும்பை அணி அறிவித்தது. இதனால் சூர்யகுமார், பும்ரா ஆகியோர் மற்ற ஐபிஎல் அணிகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் இரண்டு அணிகள் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருக்கும் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. அந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு, அதாவது டீல் ஓகே ஆகவில்லை. அதேநேரத்தில் அந்த டீலுக்கான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. இறுதிக்கட்டத்தில் இருப்பதால் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு அந்த பிளேயர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிவிடுவார்கள் என தெரிகிறது.

இது குறித்து இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் யூடியூபில் உரையாடிய கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா (Pdogg) தெரிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறப்போவது யார்? என ரசிகர் கேட்ட கேள்வியை அஸ்வின், பிரச்சன்னாவிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த பிரச்சன்னா, ” யார் அந்த 2 பிளேயர்கள் என என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால், மஞ்சள் சட்டை மற்றும் ஆரஞ்சு சட்டை அணிகள் அந்த பிளேயர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இறுதிக் கட்டத்தில் அந்த பேச்சுவார்த்தை இருக்கிறது. நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிருப்தியில் இருக்கும் அந்த 2 பிளேயர்கள் அடுத்த ஆண்டு அந்த அணியில் விளையாடமாட்டார்கள். மஞ்சள் அல்லது ஆரஞ்சு சட்டை அணிகளில் நீங்கள் அவர்களை பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.

அதிகபட்சம் அந்த இரண்டு பிளேயர்களில் ஒருவர் பும்ரா என எல்லோரும் ஆணித்தரமாக சொல்கின்றனர். இன்னொரு பிளேயர் சூர்யகுமார் அல்லது ரோகித் சர்மாவாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. பும்ரா அதிகபட்சம் சென்னை அணிக்காக விளையாடவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.