கோவை: பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்த ராகுல்காந்தியுடன் கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினும் இணைந்து வாக்கு சேகரித்தனர். பின்னர், அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றி மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “இங்கே இந்தியாவின் இளந்தலைவர் சகோதரர் ராகுல் காந்தி வருகை தந்திருக்கிறார்! நாடு சந்திக்க இருக்கும், இரண்டாம் விடுதலை […]
