சென்னை: தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் படம் ரிலீசாகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழாக்கோலமாக மாறும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகின்றார். கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
