திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது திருப்பதி அருகே லாரிகள் மூலம் செம்மரக்கட்டையில் கடத்தி வருவது தெரியவந்தது.
இதனையடுத்து கடத்தல் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ரூ. 2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள், லாரி மற்றும் கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.
Related Tags :