சென்னை: நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 13ஆம் தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அக்னி வெயில் தாக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் ஒரு மழைக்காலமாகும். இந்த பருவமழை இந்திய துணைக்கண்டத்தின் பல பகுதிகளில், குறிப்பாக தென்னிந்தியாவில் அதிக அளவில் மழையை கொண்டுவருகிறது. ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே, அதாவது மே மாதம் […]
