ஹூண்டாய் மோட்டாரின் 2025 ஆம் ஆண்டிற்கான எக்ஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் S Smart மற்றும் SX Smart என இரு வேரியண்டுகளிலும் சன்ரூஃப் வசதி பெற்றதாக ரூ.7,68,490 முதல் ரூ.9,18,490 வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலில் 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த காரிலும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.
69PS பவர் மற்றும் 95NM டார்க் வெளிப்படுத்தும் 1.2லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டு சிஎன்ஜி பயன்முறையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டு மைலேஜ் 27.1 km/kg ஆக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
2025 Hyundai Exter
முன்பாக விற்பனையில் உள்ள ஹூண்டாயின் எக்ஸ்டர் S வேரியண்டின் அடிப்படையிலான S Smart சேர்க்கப்பட்டு வசதிகளாக மின்சாரத்தில் இயங்கும் சன்ரூஃப், பின்புற ஏசி வென்ட்கள், LED டெயில் லேம்ப் மற்றும் ரன்னிங் , TPMS மற்றும் 15-இன்ச் அலாய் வீல் இடம்பெற்றுள்ளது.
அடுத்து, கூடுதலாக வந்துள்ள SX Smart வகையில் எலக்ட்ரிக் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சத்துடன் கூடிய கீலெஸ் என்ட்ரி, புரொஜெக்டர் ஹெட்லேம்ப், பின்புற பார்க்கிங் கேமரா, லெதர்ரெட் இருக்கை அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனா ஆகியவற்றை கொண்டுள்ளது.
இரு வேரியண்டில் பொதுவாக 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டாலும், ஆப்ஷனலாக பெரிய 9.0 இன்ச் டச்ஸ்கிரீன் வயர்லெஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற விரும்பினால் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் பின்புற கேமரா பெற்று ரூ.14,999 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிறுவனம் 3 வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
Variant | விலை (Ex-showroom) |
---|---|
Hyundai Exter S Smart MT | Rs. 7,68,490 |
Hyundai Exter SX Smart MT | Rs. 8,16,290 |
Hyundai Exter S Smart AMT | Rs. 8,39,090 |
Hyundai Exter SX Smart AMT | Rs. 8,83,290 |
Hyundai Exter S Smart Hy-CNG Duo | Rs. 8,62,890 |
Hyundai Exter SX Smart Hy-CNG Duo | Rs. 9,18,490 |