அரக்கோணம் அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி செய்த உத்தரகாண்ட் மாஇல சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் வளைவு என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் தண்டவாள இணைப்பு போல்டுகள் கழற்றப்பட்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு செய்யப்பட்டிருந்த ரயிலை கவிழ்க்கும் முயலும் இந்த சதிச்செயலை உரிய நேரத்தில் ரெயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்து கற்கள், போல்டுகளை அகற்றினார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து அரக்கோணம் வழியாக […]
