கடந்த 8 ஆண்டுகளாக எடுத்த கடும் நடவடிக்கையால் உத்தர பிரதேசத்தில் 142 ஸ்லீப்பர் செல்கள் ஒழிப்பு

புதுடெல்லி: தீ​விர​வா​தி​களுக்கு உதவ உளவாளி​களாக செயல்​படு​பவர்​களை ‘ஸ்​லீப்​பர் செல்​கள்’ என்​கின்​றனர். இவர்​கள் கிராமம், நகரங்​களில் சாதாரண பொது​மக்​கள் போல் ஊடுருவி வாழ்​கின்​றனர். இவர்​களில் படிப்​பறிவு இல்​லாதவர்​கள் முதல் அனைத்து வகைப் பிரி​வினரும் உள்​ளனர்.

இந்த ஸ்லீப்​பர் செல்​கள் மூலம் தீவிர​வா​தி​கள் பல்​வேறு உதவி​களை பெறுகின்​றனர். இந்​நிலை​யில், கடந்த 8 ஆண்​டு​களில் உத்தர பிரதேசத்​தில் மாநிலம் முழு​வதும் ஊடுருவி இருந்த 142 ஸ்லீப்​பர் செல்​களை கண்​டு​பிடித்து மாநில அரசு ஒழித்​துள்​ளது.

இவர்​கள் உரு​வாக்​கிய போலி இணை​யதளங்​கள் மற்​றும் அறக்​கட்​டளை​கள், அவற்​றின் நிதி, மத தீவிர​வாதம், போலி ஆவணங்​கள் மற்​றும் வெளி​நாட்டு ஊடுரு​வல் போன்​றவற்றை உ.பி. காவல் துறை கண்​டு​பிடித்து முடக்​கி​யுள்​ளது. பலர் கைது செய்யப்பட்டுள்​ளனர்.

அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில் அவர்​கள் ஸ்லீப்​பர் செல்​களாக செயல்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. அந்த வகை​யில், கடந்த 2017 முதல் 8 ஆண்​டு​களில் ஸ்லீப்​பர் செல்​களின் செயல்​பாடு​கள் முடக்​கப்​பட்​ட​தால், உத்தர பிரதேசத்​தில் தீவிர​வாத நடவடிக்​கைகள் முற்​றி​லும் தடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த 8 ஆண்​டு​களில் உ.பி.​யின் பிரபல கிரிமினல்​கள் 230 பேர் கைது செய்​யப்​பட்​டு, அவர்​கள் மீது வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. 142 ஸ்லீப்​பர் செல்​கள் ஒழிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த ஸ்லீப்​பர் செல்​களில் ஒரு​வ​ராக இருந்த தீவிர​வாதி என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளார். மேலும், 131 செயலிகள் இன்​டெல் நிறு​வனத்​தின் உதவி​யுடன் முடக்​கப்​பட்​டுள்​ளன.

இவர்​களுக்கு நிதி உதவி அளிக்​கும் 11 வலை​யமைப்​பு​களும் முறியடிக்​கப்​பட்​டுள்​ளன. உ.பி. முதல்​வ​ராக யோகி ஆதித்​ய​நாத் 2017-ம் ஆண்டு பதவி​யேற்​ற​தில் இருந்து மாநிலத்​தில் தீவிர​வாத தாக்​குதல்​கள் இல்லை என்ற நிலை உரு​வாகி விட்​ட​தாகத் அரசு தெரி​வித்​துள்​ளது. ஸ்லீப்​பர் செல்​களை ஒடுக்​கு​வ​தில் உ.பி.​யின் ஏடிஎஸ் படை 8 ஆண்​டு​களாக முன்​னிலை வகிக்​கிறது.

இதன் உதவி​யால் இது​வரை ஐஎஸ்​ஐஎஸ், ஏகியூஐஎஸ், ஜேஎம்பி ஏபிடி, எல்​இடி, ஜெஎம் எச்​எம், சிமி, நக்​சல்​கள், பிஎப்ஐ மற்​றும் பாகிஸ்​தானின் உளவு அமைப்​பான ஐஎஸ்ஐ உள்​ளிட்ட சர்​வ​தேச பயங்​கர​வா​தி​கள் சிக்​கி​யுள்​ளனர். இவர்​களில் கள்​ளநோட்​டு​களை வைத்​திருந்த 41 பேரும் கூட கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

மேலும் உ.பி.​யில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த ரோஹிங்​கியா மற்​றும் வங்​கதேச நாட்​டினர் 173 பேர் கைது செய்​யப்​பட்​டனர். உ.பி. அரசு தொடர்ந்து எடுக்​கும் நடவடிக்​கைகளால்​ மாநிலத்​தின்​ சட்​டம்​ ஒழுங்​கு மேம்​பட்​டுள்​ள​தாக கூறுகின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.