விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவாக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி கடந்த மே 12ம் தேதி நடைபெற்றிருந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால் கலந்துகொண்டிருந்தார்.
அப்போது மேடையில் பேசியிருந்த நடிகர் விஷால், “எங்கள் பெயருக்கும் முன்னால் ‘திரு’ என்று சேர்த்தால்தான் மரியாதை. ஆனால், உங்களுக்கு ‘திரு’ என்ற வார்த்தை திருநங்கை என்ற பெயரிலேயே இருக்கிறது.

நான் என் அறக்கட்டளை மூலமாக திருநங்கைகளுக்குப் பல உதவிகள் செய்து வருகிறேன். அது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இனி வரும்காலத்தில் உங்களில் இருந்து திருநங்கைகள் தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குப் போகனும். அரசியல் அதிகாரம் பெறவேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
இந்த நிகழ்வில்தான் தனது பேச்சை முடித்த மேடையில் இருந்து இறங்கி காரை நோக்கி நடந்த விஷால் திடீரென சில விநாடிகள் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விஷாலை பத்திரமாக அழைத்துச் சென்றது சில நாட்களுக்கு முன்பு பேசிபொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…