ஒகேனக்கல்லுக்கு 14,000 கனஅடி நீர்வரத்து; மேட்டூர் அணை 110 அடியை எட்டியது

தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 8,000 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. கடந்த சில நாட்​களாக காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்த மழை​யால் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது.

கர்​நாடகா வனப் பகு​தி​களில் மழை தொடர்​வ​தால் ஒகேனக்​கல்​லுக்கு வரும் தண்​ணீரின் அளவு அடுத்​தடுத்த நாட்​களில் படிப்​படி​யாக அதி​கரிக்​கக் கூடும் என்று நீர்​வளத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதனிடையே, மேட்​டூர் அணைக்​கும் நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. நேற்று முன்​தினம் விநாடிக்கு 9,683 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 12,819 கனஅடி​யாக அதி​கரித்​தது. அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

மேட்டூர் அணை நீர்​மட்​டம் நேற்று 109.33 அடி​யில் இருந்து 110.03 அடி​யாக​வும், நீர்​இருப்பு 77.46 டிஎம்​சியி​லிருந்து 78.45 டிஎம்​சி​யாக​வும் உயர்ந்​துள்​ளது. கடந்த 3 நாட்​களில் அணை நீர்​மட்​டம் 1.51 அடி​யும், நீர் இருப்பு 2.13 டிஎம்​சி​யும் அதி​கரித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.