Jio Airtel And Vi Plans: ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகியவற்றின் போர்ட்ஃபோலியோவில் பல திட்டங்கள் உள்ளன. இதில் ரூ.200க்கும் குறைவான ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ரீசார்ஜ் திட்டங்களில் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஜியோ ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம் | Jio Rs 189 prepaid plan:
டேட்டா: மொத்தம் 2 ஜிபி
அழைப்பு: அன்லிமிடெட்
எஸ்எம்எஸ்: மொத்தம் 300
செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்
கூடுதல் நன்மைகள்: ஜியோடிவி சந்தா மற்றும் ஜியோகிளவுட் கிடைக்கும்.
இந்த ப்ரீபெய்ட் திட்டம் வேல்யூ சலுகையின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு வெறும் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கும். ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) கொடுக்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் | Airtel Rs 199 prepaid plan:
ஏர்டெல்லின் (Airtel) இந்த திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் முழு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு மொத்தம் 2 ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் அழைப்பு சேவையைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் மொத்தம் 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியைப் பெறுவார்கள்.
வியின் ரூ.189 ப்ரீபெய்ட் திட்டம் | Vi’s Rs 189 prepaid plan:
VI (Vodafone Idea) இன் இந்த திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் முழு 26 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு மொத்தம் 1 ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்துடன் பயனர்கள் மொத்தம் 300 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியைப் தருகிறது. இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்புகளுடன் வருகிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், பயனர்கள் இந்த திட்டத்துடன் Vi மூவிஸ் & டிவி சந்தாவைப் பெறுவார்கள்.
ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் | Jio Rs 199 prepaid plan:
ஜியோவின் (Reliance Jio) ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) 18 நாட்களுக்கு செல்லுபடியாகும் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இது தவிர, இந்த திட்டத்தின் மூலம், பயனர்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவையைப் பெறுகிறார்கள். கூடுதலாக, பயனர்கள் ஜியோடிவி சந்தா மற்றும் ஜியோகிளவுட் சேவையையும் பெறுவார்கள்.