Swarail App: டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை… உங்கள் ஹை-டெக் ரயில் ஸ்நேகிதன்

SwaRail Super App: பிப்ரவரி 2025 இல், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) உருவாக்கிய ‘SwaRail’ எனப்படும் அதன் ஆல்-இன்-ஒன் ரயில்வே சேவைகள் செயலியின் பீட்டா பதிப்பை (வெளியீட்டுக்கு முந்தைய பதிப்பு) அறிமுகப்படுத்தியது. இந்த செயலி இப்போது கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

IRCTC: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அறிமுகம் செய்த செயலி

ஸ்வரெயில் ஒரு ‘சூப்பர் செயலி’யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, டிக்கெட் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் செய்வது வரை அனைத்து IRCTC சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது. இது IRCTC -யின் பழைய செயலியான Rail Connect செயலியிலிருந்து குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SwaRail App: ஸ்வாரெயில் சூப்பர் செயலியின் முக்கிய அம்சங்கள்

Account: கணக்கு

பயனர்கள் இதற்கான புதிய கணக்கை உருவாக்கலாம். அல்லது UTS செயலி அல்லது RailConnect செயலியின் யூசர் ஐடி, பாஸ்வர்ட் மூலம் இதில் லாக் இன் செய்யலாம். அல்லது, OTP மூலம் உங்கள் தொலைபேசி எண்ணைச் வெரிஃபை செய்து, இந்த செயலியை ஒரு கெஸ்டாகவும் பயன்படுத்தலாம்.

Ticket booking: டிக்கெட் முன்பதிவு

SwaRail செயலியில், பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிடலாம், பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, தொடர்புடைய விருப்பத்தை (ரிசர்வ்ட் அல்லது அன்ரிசர்வ்ட்) தேர்வுசெய்து, புறப்படும் இடம் (எங்கிருந்து செல்ல வேண்டும்) மற்றும் சேருமிடம் (எங்கு செல்ல வேண்டும்) ஆகியவற்றை உள்ளிட்டு, தேதி மற்றும் பயண வகுப்பைத் தேர்ந்தெடுத்து, பட்டியலிடப்பட்ட ரயில்களில் இருந்து டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

Train tracking: ரயில் கண்காணிப்பு

இந்த செயலியில், நேரடி புதுப்பிப்புகளுடன் நீங்கள் நிகழ்நேரத்தில் ஒரு ரயிலைக் கண்காணிக்கலாம். மேலும் ரயிலில் ஏற்படக்கூடிய தாமதங்கள், எதிர்பார்க்கப்படும் வருகை நேரம் மற்றும் பிற விவரங்களை பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்.

Coach finder: ரயில்பெட்டி நிலையை கண்டறியும் வசதி

இந்த செயலியின் மூலம் உங்கள் ரயில் பெட்டி பிளாட்ஃபாரத்தில் எங்கு நிற்கும் என்பதைக் கண்டறியலாம். இதன் மூலம் ரயில் பிளாட்பாரத்திற்கு வந்தவுடன் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் எளிதாகவும் விரைவாகவும் அதில் ஏற முடியும்.

Rail Madad: ரயில் மதத் குறை தீர்க்கும் அம்சம்

பிரச்சனைகளுக்கான விரைவான தீர்வுக்காக இந்திய ரயில்வேயில் நேரடியாக புகார்களைத் தெரிவிக்கவும் நிலையைக் கண்காணிக்கவும் இந்த குறை தீர்க்கும் அம்சமான ரயில் மதத்-ஐப் பயன்படுத்தலாம். மேலும், இதன் மூலம் நீங்கள் உங்கள் கருத்துக்களையும் சமர்ப்பிக்கலாம்.

R-Wallet: ஆர்-வாலட்

இது ஸ்வரெயில் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் வாலட் ஆகும். இதை பிளாட்ஃபார்மில் கிடைக்கும் சேவைகளுக்கான பாதுகாப்பான கட்டண வாலட்டாக பயன்படுத்தலாம்.

Food orders: உணவு ஆர்டர்கள்

நீங்கள் ரயிலில் இருக்கும்போது ஃப்ரெஷ்ஷான உணவை சாப்பிட விரும்பினால், இந்த செயலி மூலம் பட்டியலிடப்பட்ட உணவகங்களிலிருந்து உணவு ஆர்டர் செய்யலாம்.

Multilingual: பன்மொழி

இந்த செயலி பல மொழிகளில் கிடைக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அவர்களுக்கு வசதியான மொழியில் சேவைகளை அணுகலாம். இது இந்தியாவின் பலதரப்பட்ட மக்களுக்கு ஏற்றது. இது அதிகமான மற்றும் மேம்பட்ட அணுகலை வழங்குகிறது.

இந்த செயலியைப் பயன்படுத்த, கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரைத் திறந்து SwaRail என்று தேடவும். அதன் பிறகு, செயலியை நிறுவி, ஒரு கணக்கை உருவாக்கி, அனைத்து ரயில்வே சேவைகளையும் ஒரே தளத்தில் அனுபவிக்கத் தொடங்குங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.