லண்டன்-ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தம்பதி, இந்திய தின்பண்டமான பக்கோடாவால் ஈர்க்கப்பட்டதால், தங்கள் குழந்தைக்கு, ‘பக்கோடா’ என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
நம் நாட்டில், நொறுக்குத் தீனியில் முக்கிய இடம் வகிப்பது பக்கோடா. இதை, பிரிட்டனில் பக்கோரா என அழைக்கின்றனர். அங்குள்ள ஒரு இந்திய உணவகத்தில் விற்கப்படும் இந்த பக்கோடாவால் ஈர்க்கப்பட்ட பிரிட்டன் தம்பதி, அடிக்கடி அதை வாங்கி சுவைத்துள்ளனர்.
சமீபத்தில், தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு, ‘பக்கோடா’ எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். பக்கோடா தங்களுக்குப் பிடித்தமான தின்பண்டம் என்பதால், தங்கள் குழந்தைக்கும் அப்பெயரையே சூட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்த அந்த உணவக உரிமையாளர், பக்கோடா என பெயர் சூட்டப்பட்ட குழந்தைக்கும், தம்பதிக்கும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
லண்டன்-ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தம்பதி, இந்திய தின்பண்டமான பக்கோடாவால் ஈர்க்கப்பட்டதால், தங்கள் குழந்தைக்கு, ‘பக்கோடா’ என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.nsimg3115536nsimgநம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்