சென்னை : நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம், சூரரைப் போற்று, விக்ரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளன.
இந்தப் படங்களை தொடர்ந்து பாலா இயக்கத்தில் அவரது நடிப்பில் வணங்கான் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து 35 நாட்கள் கன்னியாகுமரியில் நடத்தப்பட்டது.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையும் முன்னதாக தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா திரையுலகில் நடிகராக தன்னுடைய 25 ஆண்டு பயணத்தை முடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களை மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துள்ளார். அவரது நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்தன.

மிரட்டிய ரோலக்ஸ் கேரக்டர்
இந்தப் படங்களில் விக்ரம் படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவரை சூர்யாவை இப்படி ஒரு கேரக்டரில் ரசிகர்கள் முன்னதாக பார்த்ததில்லை. முன்னதாக 24 படத்தில் வில்லனாக சூர்யா நடித்திருந்தாலும் ரோலக்ஸ் கேரக்டர் மிரட்டலை தந்துள்ளது.

வணங்கான் படம்
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக 18 ஆண்டுகளுக்கு பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துவந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் 35 நாட்கள் தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்றது. அடுத்ததாக கோவாவில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெறவிருந்த நிலையில் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

சூர்யா 42வில் இணைந்த சூர்யா
தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில்தான் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளி போயுள்ளது. இதனிடையே இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.

மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு
இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட சில தினங்களிலேயே படத்தின் மோஷன் போஸ்டர் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் சில தினங்கள் சூட்டிங் நடைபெற்ற நிலையில் இன்னும் சில தினங்களில் படக்குழுவினர் கோவா செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கோவாவில் அடுத்தக்கட்ட சூட்டிங்
வரும் 13ம் தேதி முதல் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் வெற்றிமாறனின் வாடிவாசல் சூட்டிங்கில் சூர்யா இணையவுள்ளதால் அதற்கு முன்னதாக ஒரே கட்டமாக சூர்யா 42 படத்தின் சூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்
சூர்யாவின் நடிப்பில் தற்போது வணங்கான், வாடிவாசல் படங்கள் வரிசைக்கட்டியுள்ள நிலையில் சூர்யா 42 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அடுத்ததாக இவர் மீண்டும் சுதா கொங்கராவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை சுதா கொங்கரா தற்போது சூர்யா தயாரிப்பில் இயக்கி வருகிறார்.