12 நாட்களுக்கு பின் இயக்கப்பட்ட அரசுப்பேருந்து காட்டாற்றில் சிக்கிய அலவம்! தவித்த மக்கள்!

12 நாள்களுக்கு பின் மீண்டும் இயக்கியபோது அரசுப்பேருந்து சர்க்கரைப்பள்ளம் காட்டாற்றில் சிக்கியதால், நடுக்காட்டில் பயணிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூல் மலைப்பகுதி மாக்கம்பாளையம், கோம்பைத்தொட்டி, அருகியம் கிராமங்களில் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியைச் சேர்ந்த 40 மாணவ,மாணவியர் கடம்பூர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் கல்விக்காகவும், ஊர்மக்கள் மருத்துவம், காய்கறி சந்தை உள்ளிட்ட அத்தியவசிய அன்றாட தேவைகளுக்கு கடம்பூர், சத்தியமங்கலம் செல்ல வேண்டியுள்ளது. இவர்கள் சுமார் 20 கிமீ தூரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பயணித்து சர்க்கரைப்பள்ளம், மாமரத்துப்பள்ளம ஆகிய காட்டாற்றுகளை தாண்டி செல்கின்றனர்.
image
கடந்த 12 நாள்களாக இரு காட்டாற்றுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது இரு தினங்களாக வெள்ளம் வடிந்த பிறகு 3 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இரு காட்டாறுகளில் கற்கள் போட்டு பேருந்து செல்லும் வகையில் சாலை அமைத்தனர். 12 நாள்களுக்கு பின் இன்று கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அரசு பேருந்து சர்க்கரைப்பள்ளம் காட்டாற்றில் சிக்கியது.
image
பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக பள்ளத்தில் இறங்கி கரை சேர்ந்தனர். இதனால் 4 மணி நேரமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பயணிகள் விலங்குகள் அச்சுறுத்தும் காட்டுப்பகுதியில் 4 மணி நேரமாக அச்சத்துடன் காத்திருந்தனர். பின்னர் கடம்பூரில் இருந்து ஜேசிபி வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி போராட்டத்துக்கு பின் பேருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் புறப்பட்டது.
image
தினந்தோறும் இது போன்ற சிரமங்களை சந்திப்பதாக வருந்தும் பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி மக்களின் 75 ஆண்டு கால கோரிக்கையான உயர்மட்ட பாலம் அமைத்து கொடுப்பதே இதற்கு தீர்வாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.