திமுக கூட்டணிக்கு போனது தவறு.. ஒவ்வொரு நாளும் வேதனை.. பகீர் கிளப்பிய எம்.பி பாரிவேந்தர்!

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஆர்.சத்யநாத உடையார் இல்ல திருமண விழா நடைபெற்றது.இத்திருமண விழாவில் கலந்துக்கொண்ட ஐஜேகே நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மணமக்களை வாழ்த்தினார்.

இந்த மணவிழாவில் ‘வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்..! இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்..!’ என்ற வாசகத்துடன், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை மணமக்கள் திறந்து வைத்தனர். இந்த மையத்தில் திருமணத்திற்க்கு வந்திருந்தவர்கள் இலவசமாக ஆதார் அட்டையுடன்,வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக் கொண்டனர்.

விழா மேடையில் எம்.பி பாரிவேந்தர் பேசியதாவது:

“தலைமை பொறுப்பு என்பது நிரந்தரமானது அல்ல. பதவியில் இருப்பவர் சமூகத்திற்கு என்ன செய்தோம் என்பதை பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். 5 முறை தலைவராக இருப்பவரால் என்ன செய்ய முடியுமோ..! அதை 2 முறை தலைவராக இருந்த சத்தியநாதன் சாதித்துள்ளார்.

இந்த திருமண விழாவில் சங்க மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வளர்ந்த கட்சியினர் கல்யாண மேடைகளில் பேசி தான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். சாதி இல்லை என்று சொல்பவர்கள், தொகுதியில் எந்த சாதி மக்கள் அதிகமாக இருக்கிறார்களோ..! அந்த சாதியை சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.

நான் பாஜக கூட்டணியில் 2.40 லட்சம் வாக்குகள் பெற்றேன். பின்னர் மாற்றுக் கூட்டணியில் 2.47 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். எம்.பி பதவி என்பது எனது அடையாளத்தின் சிறு துளி. இதற்காக நான் போகாத இடத்திற்கு போய் இருக்க வேண்டாம்.

நான் தனித்து போட்டியிட்டிருந்தால் கூட 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். இதனை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன்.நாங்கள் அவரப்பட்டு விட்டோம்” இவ்வாறு கூறினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கடந்த மாதம் சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற கட்சி விழாவில் குடும்ப ஆட்சி பற்றியும்

பற்றியும் மறைமுகமாக பாரிவேந்தர் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளிப்படையாகவே திமுக கூட்டணிக்கு சென்றதை தவறு என்று கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபெருளாகியுள்ளது. பாரிவேந்தர் அவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.