50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.

2022 செப்டம்பர்12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 செப்டம்பர்12ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின்ஏனைய  பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்தியமலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.