23 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த 56 வயதான நடிகர் பப்லு? வெளியான புகைப்படம்


நடிகர் பப்லு பிரித்விராஜுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக தகவல்.

மலேசியாவை சேர்ந்த பெண்ணை மறுமணம் செய்தார் என கூறப்படுகிறது.

பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் இளம் வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

56 வயதான பப்லு பல தமிழ் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இந்த வயதிலும் தன் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதற்கு காரணம் மனைவி என கூறினார்.

அடுத்த கனவே அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர், காரணம் பப்லு தனது மனைவி என மேடையில் அழைத்த போது அங்கு வந்தது 23 வயதான இளம்பெண்..!

ஏனெனில் பப்லுவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 25 வயதில் மகன் இருக்கிறார். பப்லுவின் இரண்டாம் திருமணம் குறித்து அவர் நண்பர்கள் வட்டம் கூறுகையில், பப்லுவுக்கு பீனா என்கிறவருடன் திருமணம் ஆன நிலையில் அஹத் என்ற மகன் உள்ளார்.

23 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த 56 வயதான நடிகர் பப்லு? வெளியான புகைப்படம் | Babloo Pritviraj Second Marriage Tamil Cinema

அவர் ஆட்டிசம் குறைபாடு உடையவர். இதனால் பப்லு மன உளைச்சலில் இருந்தார்.
அதே நேரம் மகனை மிகவும் கனிவுடன் கவனித்து வந்தார். மனைவியுடன் இது தொடர்பாக சண்டை இருந்து வந்த நிலையில் இருவரும் பிரிந்தனர்.

ஆனாலும் மகனுக்கு தேவையானதை பப்லு தொடர்ந்து செய்து வருகிறார்.
பின்னர் மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் பப்லுவுக்கு நட்பான நிலையில் அந்த நாட்டில் தொழில் தொடங்க அவர் பப்லுவுக்கு உதவியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்ததாக தெரிய வந்ததாக கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.