சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆந்திராவைச் சேர்ந்த 35 வயது இளம் பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அந்தப்பெண் குணமடைந்து பிறகு ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். தோனியின் தீவிர ரசிகையான அப்பெண் சிகிச்சைக்குப் பின் வரையும் தனது முதல் ஓவியமாக தோனியின் ஓவியத்தை வரைந்துள்ளார். காவேரி மருத்துவமனையின் குழும நிறுவனர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ், காவேரி மருத்துவமனையின் பிராண்ட் தூதரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான தோனியிடம் அப்பெண் வரைந்த ஓவியத்தைக் பரிசாக கொடுத்து கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

இது பற்றி நெகிழ்ச்சியாகக் கூறியுள்ள தோனி, “உயிருக்கு போராடும் உயிர்களை காப்பதற்கு உறுப்பு தானம் மிகவும் உதவியாக இருக்கிறது. நான் நேசித்த ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்த போதிலும் அவர்களது உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் எட்டு நபர்கள் வரையிலும் காப்பற்ற முடியும். தாராள மனதுடன் உடல் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினருக்கும், வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.