
திருமணத்திற்குத் தயாராகும் ஹன்சிகா
தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஹன்சிகா. கடந்த சில ஆண்டுளாக அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வந்தன. இந்நிலையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகும் முடிவை எடுத்த ஹன்சிகா அவருடைய காதலைப் பற்றி சமீபத்தில் அறிவித்தார்.
அவரது பிசினஸ் பார்ட்னரான சோஹேல் கத்தூரியா என்பவரை டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமணத்திற்கான சடங்கு முறைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. நேற்று மும்பையில் 'மாதா கி சௌக்கி' என்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு நடைபெற்றது. மணமக்கள் இருவரும் சிவப்பு நிற ஆடை அணிந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜெய்ப்பூரில் உள்ள பழங்கால முன்டோட்ட கோட்டையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ம் தேதி மெஹந்தி நிகழ்வும்அங்குதான் நடைபெற உள்ளதாம். டிசம்பர் 4ம் தேதி இரவு திருமண பார்ட்டி நடைபெற உள்ளதாகத் தகவல்.