தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உட்பட பொருட்களை விநியோகம் செய்த தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பிடிஎஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யும் ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யும் அருணாச்சலம் இம்பேக்ஸ், காமாட்சி அண்ட் கோ உட்பட ஐந்து நிறுவனங்கள் தொடர்ந்து வரி எய்ப்பு செய்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனங்கள் மூலம் கடந்த பொங்கலுக்கு தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் எழுந்ததால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
மேலும் இந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசு சுமார் 7 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்திருந்தது. சென்னையில் மட்டும் ஏழ இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது தண்டையார்பேட்டை, மண்ணடி போன்ற பகுதிகளில் உள்ள நிறுவனத்திற்கு சுகம் சொந்தமான தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.