
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு வயது சிறுவன் 2 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெருசலேமில் பேருந்து நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பில், ஒருவர் உயிரிழந்தார், 12 பேர் படுகாயமடைந்தனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் கத்தாரில், மக்கள் மெட்ரோவில் பாடுவதற்கும், வீதிகளில் பலூன்களைப் பறக்கவிடுவதற்கும், வானவில் தொப்பிகள் அணிவதற்கும் அந்நாட்டு அரசு தடைவிதித்திருக்கிறது.

சிரியாவின் சில நகரங்கள்மீது துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.

உலகங்கிலும் தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல ஃபேஷன் நிறுவனமான (Gucci) குஸியிலிருந்து நட்சத்திர வடிவமைப்பாளர் அலெஸ்சாண்ட்ரோ மிஷெல் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியில் நிலவும் கடும் வறுமையின் காரணமாகப் பசிக்கும் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரைகள் கொடுக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

உக்ரைனில் மருத்துவமனைமீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.