தாய்லாந்தில் கணவர் லொட்டரியில் ஜெயித்த பணத்தை மனைவியின் வங்கி கணக்கிற்கு மாற்றியதும் 26 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த மனைவி ஓட்டம் பிடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
தாய்லாந்தின் இசான் மாகாணத்தை சேர்ந்த மணித்(49) என்ற நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 6 மில்லியன் பாட்(Baht) பரிசு தொகை லொட்டரியில் கிடைத்துள்ளது.
இந்த பரிசு தொகை இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 1.3 கோடியாகும்.
வரி விலக்குகள் போக மீதமுள்ள முழு தொகையும் மணித்-தின் வங்கி கணக்கில் லொட்டரி நிறுவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
THAIGER
ஓட்டம் பிடித்த மனைவி
இதையடுத்து வெற்றி பெற்ற முழு தொகையும் மனைவி அங்கனரத் மீதுள்ள காதலால் அவரது வங்கி கணக்கிற்கு மணித் மாற்றியுள்ளார்.
மணித் பரிசு தொகையை மனைவி அங்கனரத் கணக்கிற்கு மாற்றியதும் , லொட்டரியில் வென்ற மொத்த தொகையையும் சுருட்டி கொண்டு விட்டு மனைவி அங்கனரத் ஓட்டம் பிடித்துள்ளார்.
இருவருக்கும் திருமணம் ஆகி 26 ஆண்டுகள் ஆகிய நிலையில், மனைவி அங்கரனத் அவரது காதலனுடன் தப்பி ஓடி இருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவிக்கவே கணவர் மணித் மிகுந்த கவலை அடைந்துள்ளார்.
Wife in stolen lottery prize drama goes home – returns 3.1 million baht, but hubby must move out ➡️ https://t.co/BVE56fS56b#Thailand #WhatHappensInThailand #news #ThailandNews #lottery pic.twitter.com/Y3WqBJgF9R
— ASEAN NOW Thailand, formerly Thaivisa.com (@ASEANNOWTH) November 21, 2022
மீண்டும் வந்த மனைவி
தப்பி ஓடிய மனைவி ஓரிரு நாட்களில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார், ஆனால் தனக்கு கணவர் மணித்துடன் வாழ பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் லொட்டரி வெற்றி தொகையில் அவரது குழந்தைகளுக்கு மட்டும் சிறிய பங்கை வழங்கி விட்டு கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே உறவினர்கள் குறிப்பிட்டது போல காதலனுடன் தான் ஓட்டம் பிடிக்கவில்லை என்று அங்கனரத் தெரிவித்தாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
THAIGER